கிறுக்குத்தனமாக அதை வெளிப்படுத்தும் 7 விஷயங்கள்…!!
உங்களுக்கே தெரியாமல் நண்பர் / தோழி என்ற போர்வையில் உங்களை அசுரத்தனமாக காதலிக்கும் நபர்கள் சுற்றிக் கொண்டிருக்கலாம்.
எங்கே காதலை வெளிப்படுத்தி உங்களுக்கு பிடிக்காமல் போய்விட்டால், கதை அம்பேல் ஆகிவிடுமோ, உங்களுடன் அதன் பிறகு பேச முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த காதலை வெளிபடுத்தாமல் காத்திருப்பார்கள்.
ஆனால், அகத்தை பூட்டி வைத்தாலும், முகமும், அவர்களது மனோபாவமும் அவ்வப்போது காதலுடன் எட்டிப்பார்த்துக் கொண்டே தான் இருக்கும்.
அந்த சமயங்களில் அவர்களது சில செயல்பாடுகள் மற்றும் குணாதிசயங்களை வைத்து அவர் உங்களை கிறுக்குத்தனமாக காதலிக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்….
நேரம் செலவழிப்பது
உங்களுடன் நேரம் செலவழிக்க மற்ற வேலைகளை கூட உதறிவிட்டு வருவது. எங்கே அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கூட நீங்கள் செல்லும் இடத்தில் வந்து நிற்பது.
காரணங்கள் உண்டாக்குவது
உங்களை காண வேண்டும் என்பதற்காக காரணங்களை உருவாக்குவது. நம்ப முடியாதபடி இருப்பினும் கூட, அசடுவழிய முகத்தை வைத்துக் கொண்டு உங்களோடு இணைந்தே இருப்பது.
நீங்கள் விரும்பாதவை பிடிக்காது
ஏதேனும் நிகழ்வு, அல்லது அவர்கள் செய்த செயலாக இருப்பினும் கூட, உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அதை விரும்பாமல் இருப்பது அல்லது மனம் நொந்து போவது.
முழுமையாக ஏற்றுக் கொள்வது
உங்களது குணங்களை, குணாதிசயங்களை நூறு சதவீதம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறை. தங்களுக்காக நீ இதை எல்லாம் மாற்றிக் கொள்ள தேவையில்லை என்று கூறும் விதம்.
நடத்தையிலும் நன்றாக நடப்பது
சிலர் பேச்சில் மட்டும் தான் மிகவும் பண்பாக பேசுவார்கள். ஆனால், நடத்தையில் அப்படி இருக்காது. நேரம் கிடைக்கும் போது பச்சோந்தியாக மாறிவிடுவார்கள்.
இப்படி இல்லாமல், நடத்தையிலும் கூட நாகரீகமாக நடந்துக் கொள்வது.
சார்ந்திருக்காமல் இருப்பது
எந்த ஒரு விஷயத்திற்கும் உங்களை சார்ந்திருக்காமல், உங்களையும் அவர்கள் மேல் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் இருப்பது.
உங்களை மட்டுமே நேசிப்பது
பேச்சுக்கு கூட, மற்றவர்களை விரும்புவது போல பேசாமல், உங்கள் மீது மட்டுமே தங்களது முழு நேசத்தையும் காட்டுவது.
இவை எல்லாமே, அந்த நபர் உங்களை கிறுக்குத்தனமான முறையில் நேசித்துக் கொண்டிருக்கிறார் என்று வெளிப்படுத்துபவை ஆகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating