சித்திரையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா….?

Read Time:3 Minute, 42 Second

baby_01.w245ஆடி மாசம் கணவன், மனைவி சேரக்கூடாது… சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு.

பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும்.

இலங்கை இந்தியாவைப் பொறுத்தவரை சித்திரையில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும்.

மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். இச் சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சுவதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதே போல தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய் களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான், ‘சித்திரையில் பிள்ளை வேண்டாம்’ என்றனர் நம் முன்னோர்கள்.

ஆனால், விழிப்பு உணர்வு, மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அந்த மூடநம்பிக்கைக்கும், அச்சத்துக்கும் அவசியமே இல்லை. சமயங்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன” என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த மாதத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று நம்முடைய புராண இதிகாச நூல்களில் எந்தக் குறிப்புகளும் இல்லை. ஜாதக ஆய்வுகளிலும் அப்படி எதுவும் கூறப்படவில்லை.

ஏகபத்தினி விரதனான ராமன் பிறந்த ராமநவமி வருவது சித்திரை மாதத்தில்தான்.

அந்தக் காலங்களில் கோடையில் போதுமான தற்காப்பு இல்லாததால் அப்படிச் சொல்லி வைத்தனர். தற்போது தேவையான வசதிகள் இருப்பதால் சித்திரையை ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை!”

கர்ப்பம் தரிப்பதற்கோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ ‘இந்த மாதம்தான் உகந்தது… இந்த மாதம் சரி கிடையாது’ என எதுவுமே இல்லை.

வருடத்தின் எல்லா நாட்களிலும் கர்ப்பம் தரிக்கலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

இனி என்ன கவலை… எந்த மாதமும் பிள்ளை பெத்துக்கலாம், குதூகலமான வாழ்க்கைக்கு மழலை அவசியம். மறந்துவிடாதீர்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரார்த்தனை செய்த சுட்டி குழந்தை: வியந்து பாராட்டிய பெற்றோர்…!!
Next post சத்து குறைபாடுகள்…!!