உணவுப் பொதியிலிருந்த பல்லி ஆரம்ப வகுப்பின் செல்லப்பிராணியாக மாறியது…!!

Read Time:1 Minute, 44 Second

dfgfgfgfgஅமெரிக்க பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரின் உணவுப்பொதியில் காணப்பட்ட பல்லியொன்று தற்போது அவ் வகுப்பு மாணவர்களின் செல்லப்பிராணியாக விளங்குகிறது.

நியூஜேர்ஸி மாநிலத்திலுள்ள ஆரம்ப விஞ்ஞான வகுப்பொன்றின் மாணவரின் சலட் உணவில் பல்லியொன்று காணப்பட்டது.

3 அங்குல நீளமான பச்சை நிறமான அப் பல்லி பல நாட்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்ததால் உறைந்த நிலையில் மயங்கிக் காணப்பட்டது.

ஆனால்,வெப்பமூட்டப்பட்ட பின்னர் தற்போது அது கூடொன்றில் வைத்து வளர்க்கப்படுவதாக மேற்படி வகுப்பின் விஞ்ஞான ஆசிரியர் மார்க் ஈஸ்ட்பர்ன் தெரிவித்துள்ளார்.

“ இப் பல்லியானது ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு ஒரு செல்லப் பிராணியாக விளங்குவதுடன் அது எமது வகுப்பின் சின்னம் போன்று உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மேற்படி சலட் உணவை விற்பனை செய்த நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கூறுகையில், கடந்த 17 வருடங்களாக இத்தகைய உணவை நான் விற்பனை செய்கிறேன்.

ஆனால், வாடிக்கையாளர் ஒருவருக்கு பல்லியொன்று விநியோகிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஜகஸ்தானில் ஹெலி விபத்து; குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு…!!
Next post சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை…!!