பேஸ்புக் கள்ளக்காதல் கசந்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்…!!
கணவனை கைவிட்டு விட்டு பேஸ்புக் நண்பருடன் ஓடிச்சென்ற பெண் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்திருப்பதாவது, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனீபர் (வயது 31). இவருடைய கணவர் கிறிஸ்டோபர். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.
ஜெனீபர் தனது ஊரின் அருகிலுள்ள ஒரு கணினி நிலையத்துக்கு சென்று வருவதை வழமையாக கொண்டுள்ளார். இதன்போது அவர் பேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.
அதன் மூலம் அவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகேஉள்ள லக்காபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் (26) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் இருவரும் பேஸ்புக் மூலம் அடிக்கடி செட் செய்துள்ளனர். இது நாளடைவில் இவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் செல்போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இதையடுத்து ஜெனீபர் அசோக்குமாரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஜெனீபர் தனது காதலன் கூறியபடி வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன்பின்னர் இருவரும் வீடெடுத்து வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே ஜெனீபரை காணவில்லை என்று அவருடைய முதல் கணவர் கிறிஸ்டோபர் நரசிங்கபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ஜெனீபர் மொடக்குறிச்சி லக்கா புரத்தை சேர்ந்த அசோக்குமாரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பொலிஸார் ஜெனீபரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது அவர், தனக்கு கிறிஸ்டோபருடன் வாழ பிடிக்கவில்லை என்றும், அசோக்குமாருடன் தான் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் அசோக்குமாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜெனீபருக்கும், அசோக்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று கரூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வருமாறு ஜெனீபரை அசோக்குமார் அழைத்துள்ளார்.
அதற்கு ஜெனீபர் மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அசோக்குமார் எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் ஒரு அறையில் ஜெனீர்பர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அசோக் குமார் இதுகுறித்து அவர் மொடக்குறிச்சி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் கிடைத் ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெனீப ரின் உடலை மீட்டு பரிசோ தனைக்கு அனுப்பினர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating