குற்றவாளிகளை தண்டிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்…!!

Read Time:1 Minute, 46 Second

dsfddfகுற்றவாளிகளை தண்டிப்பதும், குற்றமற்றவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிட்ட போது,
ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக முழு இராணுவமும் அவமானப்பட வேண்டியதில்லை. குற்றமற்றவர்கள் குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது.

இராணுவத்தின் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சர்வதேச சமூகம் சுமத்தியுள்ளது. இலங்கைப் படையினருக்கு அவமரியாதை ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது. எனவே குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச மாநாடு ஒன்றின் போது இராணுவப் பயிற்சி குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா என்னிடம் வினவியிருந்தார்.எனவே எமது படையினருக்கு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோசிதவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட உள்ளது…!!
Next post பேஸ்புக் கள்ளக்காதல் கசந்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்…!!