4 குடிசன மதிப்பீடுகள் இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படும்…!!

Read Time:2 Minute, 5 Second

ertrtffஇந்த வருடத்தில் நான்கு குடிசன மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

குடிசன மதிப்பீட்டின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய அளவீடுகளின் வெளிக்கள வேலைகள், சிறுவர் செயற்பாட்டு அளவீட்டுக்குரிய வெளிக்கள வேலை ஆகியன ஏற்கன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையின் கீழ், மேலதிகமாக மக்களியல் மற்றும் சுகாதார அளவீடு எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தை மேற்கொள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

குடிசன மதிப்பீட்டின் வருமானம் மற்றும் செலவினங்கள் பற்றிய அளவீடானது தனிநபர் வருமானம், தனிநபர் செலவீனம், வறுமை மற்றும் சொத்துகளின் உரிமை போன்றவற்றை உள்ளடக்கிய அளவீடுகளை கணிப்பதற்காக நடத்தப்படுகின்றன.

இந்த அளவீடானது 3 வருடங்களுக்கு ஒருதடவை நடத்தப்படுவதுடன், இறுதியாக 2012 / 2013 காலப்பகுதியில் நடத்தப்பட்டிருந்தது.

சிறுவர் செயற்பாட்டு அளவீட்டின் மூலம், 5 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்ட சிறுவர் செயற்பாடுகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

சிறுவர் செயற்பாட்டு அளவீட்டு நடவடிக்கைகள் மூன்றாவது முறையாக இந்த வருடம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டிலும், 2008 / 2009 ஆண்டு காலப்பகுதியிலும் நடத்தப்பட்டிருந்த்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரமாண்டமான சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு…!!
Next post யோசிதவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட உள்ளது…!!