12 இலட்சம் ரூபாவுக்கு ரயில் சீசன் டிக்கெட் வாங்கி துடைப்பான்களுக்கான கபோர்ட்டில் அமர்ந்து பயணிக்கும் நபர்…!!

Read Time:2 Minute, 2 Second

gfபிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் வரு­டாந்­தம் 12 இலட்சம் ரூபா செலவில் பரு­வ­கால பய­ணச்­சீட்டு (சீசன் டிக்கெட்) பெற்­றுக்­கொண்டு ரயிலில் துடைப்­பான்­களை வைக்கப் பயன்­ப­டுத்­தப்­படும் கபோர்ட் ஒன்றில் அமர்ந்­த­வாறு பயணம் செய்­கிறார்.

இந் ­நபர் தனது பெயரை வெளி­யிட விரும்­ப­வில்லை.

ஆனால், தான் பிரிட்­டனின் இப்ஸ்விச் நகரில் வசிப்­பவர் எனவும் வாராந்தம் 5 நாட்கள் தொழி­லுக்­காக லண்­ட­னுக்குச் சென்று திரும்­பு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

ரயிலில் ஆச­னத்தைப் பெற்­றுக்­கொள்­வது சிர­ம­மாக உள்­ளதால் மேற்­படி கபோர்ட்டில் அமர்ந்து பயணம் செய்­வ­தற்கு தான் தீர்­மா­னித்­ததாக அவர் கூறு­கிறார்.

“காலையில் பயணம் செய்­யும்­போது எனக்கு ஆச­ன­மொன்று கிடைக்கும். ஆனால், மாலை 6.30 மணிக்கு வீடு திரும்­பும்­போது அதிக சன நெரிசல் கார­ண­மாக ஆசனம் கிடைப்­பது சிரமம்.

இதனால், ரயில் பெட்­டி­யொன்றில் துடைப்­பான்கள், வாளி­களை வைப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் கபோர்ட் ஒன்றில் தான் அமர்ந்து­கொள்­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

வரு­டாந்தம் 6000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 12 இலட்சம் ரூபா) பெறு­ம­தி­யான பரு­வ­கா­லச்­சீட்டை வாங்கி இவர் ரயிலில் பயணம் செய்­கிறார்.

ஆனால், வாளிகள், துடைப்பான்களுக்கு அருகில் அமர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்…!!
Next post ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை; எரித்திரியா அரசு அறிவிப்பு…!!