ஆப்கானிஸ்தானில் மயக்க மருந்து கொடுத்து 10 போலீசார் சுட்டுக்கொலை…!!

Read Time:1 Minute, 57 Second

rtyஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள சினார்டோ நகரில் எல்லைப் புற சோதனைச் சாவடி உள்ளது. இங்கு 11 போலீஸ்காரர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் ஒருவர் நேற்று தன்னுடன் பணியில் இருந்த சக போலீஸ்காரர்கள் அனைவருக்கும் மயக்க மருந்து கொடுத்தார்.

அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தபோது துப்பாக்கியால் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளினார். இதில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ்காரர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து உருஸ்கான் மாகாண போலீஸ் தலைவர் ரகிமுல்லா கான் கூறுகையில், ‘‘எங்களுடைய விசாரணையில் போலீசாரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் தலீபான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இவர், போலீஸ் பணியில் இணைந்து தலீபான்களுக்கு ரகசியமாக உதவி செய்து வந்துள்ளார். போலீஸ்காரர்களை கொன்றுவிட்டு தப்பிச் சென்றவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது’’ என்றார்.

கடந்த ஒரு வாரத்தில் உருஸ்கான் மாகாணத்தில் இதுபோல் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். கடந்த 17-ந்தேதி 9 போலீசாரை காவல்துறைக்குள் ஊடுருவி செயல்பட்டு வந்த 4 தலீபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் சந்திக்கும் பிரச்சனைகள்…!!
Next post அமெரி்க்காவின் சான்டியாகோ ராணுவ மருத்துவமனையில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு: போலீசார் குவிப்பு…!!