பிரிட்டன் வேலைகளில் வெளிநாட்டினர் ஆதிக்கம் ‘அமோகம்

Read Time:2 Minute, 7 Second

இங்கிலாந்தில், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து பிரஜைகளை விட வெளிநாட்டினருக்குத்தான் 81 சதவீத வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து புள்ளிவிவர ஆணையம் எடுத்த இந்த கணக்கெடுப்பில், 1997ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் 10.0 லட்சம் வேலை வாய்ப்புகளில், 10.4 லட்சம் வேலைகளில் வெளிநாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களே அமர்ந்துள்ளனர். முந்தைய ஒரு கணக்கெடுப்பில் 54 சதவீத வேலைகள் மட்டுமே வெளிநாட்டினருக்குக் கிடைத்ததாக கூறப்பட்டது. ஆனால் புதிய புள்ளிவிவரப்படி 81 சதவீதமாக இது உள்ளது. இந்த புள்ளி விவரத்தில், இங்கிலாந்து குடியுரிமை பெற்று வெளிநாடுகளில் பிறந்த 3 லட்சம் பேர் சேர்க்கப்படவில்லை. 1997ம் ஆண்டு முதல் இதுவரை 20.1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதில் பத்து லட்சம் பேர் இங்கிலாந்து குடிமக்கள். 10.1 லட்சம் பேர் வெளிநாட்டினர். அதாவது இங்கிலாந்துக்காரர்களை விட வெளிநாட்டினருக்குத்தான் இங்கிலாந்தில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. லண்டனில் இந்தியர்கள் நம்பர் 2: இதற்கிடையே, லண்டன் நகரில் ஆங்கிலேயர்களுக்கு அடுத்து அதிகம் வசிக்கும் இனமாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். 3வது இடத்தில் வங்கேசத்தினர் உள்ளனர். பாகிஸ்தானியர்களுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கர்கள் 8வது இடத்தில் உள்ளனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மசூதியில் சானியா ஷூட்டிங்- கோபத்தில் முஸ்லீம்கள்
Next post நடிப்புக்கு ஸ்ரீதேவி கும்பிடு