சிறுவர் துஷ்பிரயோகம் : மாணவர்கள் இடை விலகல் அதிகரிப்பு…!!

Read Time:3 Minute, 6 Second

ddfசிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் பாடசாலை இடை விலகும் மாணவர்களின் அளவும் கணிசமாக அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகுமென அக்கரைப்பற்றுப் பிராந்திய சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.ஆர். றபானா தெரிவித்தார்.

வளமான சிறுவர் பாதுகாப்பு கிராமங்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்துப்பட்டு வரும் இந்நிகழ்வின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சிறுவர் பாதுகாப்புப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 97 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் கடற்கரை பிரதேசங்களைச் சேர்ந்த வர்களாகக் காணப்படகின்றனர்.

பெண்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் அதிகமான மாணவர்கள் தொழில்களுக்கு செல்வதோடு வேறு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இப்பிரதேசங்களிலேயே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுவருவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளன.

மற்றவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பது எமக்கும் சமூகத்திற்குமுள்ள கடமையாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் தமது பிள்ளைகளைக் கூட கவனிக்காமல் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதை நிச்சயமாக ஒவ்வொரு பெற்றோரினாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகக் காணப்படுகின்றது.

சிறுது சிறுதாக சேமிப்பதன் மூலமே பெரும் தொகையை எம்மால் சேமிக்க முடிவதைப்போல் முதலில் தனி மனிதனிலிருந்தே மாற்றம் பெற வேண்டும். அப்போதுதான் சமூக மாற்றத்தைக் காண முடியும்.

பிள்ளைகளின் பாசறை வீடுதான். அங்கு சிறந்த பாதுகாப்பும், பண்புகளும் வளர்க்கப்பட வேண்டும். இதன் மூலமே சிறந்த சமூகத்தைக் கடடியெழுப்ப முடியும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இரு நண்பர்கள் – ஒருவர் கவலைக்கிடம்…!!
Next post அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!