லிபியாவில் எண்ணெய் கிணறுகளை தாக்கி அழித்த தீவிரவாதிகள்: 30 லட்சம் பீப்பாய்கள் சேதம்…!!

Read Time:1 Minute, 41 Second

a0b3a0a4-4c30-4b90-b348-65265bc6492c_S_secvpfஆப்பிரிக்க நாடான லிபியா எண்ணெய் வளம் மிகுந்தது. இங்கு அரசு கட்டுப்பாட்டில் பல எண்ணெய் கிணறுகள் உள்ளன. எனவே, இங்கும் ஆதிக்கம் செலுத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். அவர்களை தடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக உள்ளது. அதனால் இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே ராஸ் லனூப் என்ற இடத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் கிடங்குகள் மற்றும் சேகரிப்பு பகுதியில் புகுந்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

பதிலுக்கு ராணுவமும் தாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் தூரத்தில் இருந்து 13 எண்ணெய் கிணறுகள் மீது வெடிகுண்டு மற்றும் ராகெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 5 எண்ணெய் கிடங்குகள் எரிந்து நாசமாயின.

அங்கு சுமார் 30 லட்சம் பீப்பாய் எண்ணெய் சேதம் அடைந்துள்ளதாக தேசிய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது. மேலும், அங்கு பாதிப்புக்குள்ளான கிடங்குகளில் எரியும் தீயை கட்டுப்படுத்த ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!
Next post பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றத் தடை…!!