கனடா உலகத்தமிழர்- விசாரணையில் வெளிவரும் உண்மைகள்! பலர் கைது செய்யப்படும் சாத்தியம்!!

Read Time:3 Minute, 51 Second

LTTE.wtm.canada.jpgகனடாவில் புலிகளின் உலகத்தமிழர் இயக்கம் குற்றப்புலனாய்வு துறையினரான ஆர்.சி.எம்.பி.யினால் முன்பு முற்றுகையிடப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அறிந்ததே. இதன் பிரகாரம், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளிற்கு தவணைமுறையில் பணம் கொடுத்தவர்கள் முதல், ரொக்கத்தொகையாக 10,000 டாலருக்கு மேற்பட்டவரை பணம் கொடுத்த வர்த்தகர்கள் உட்பட, புலிகளை வன்னிவரை சென்று சந்தித்துவந்தவர்களின் பெயர் விபரங்கள் உட்பட முக்கிய விபரங்கள் ஆர்.சி.எம்.பி பொலிஸாரிடம் சிக்கியுள்ளனவாம்.

இவ்ஆவணங்களை விபரமாக பரிசீலிக்க மேலும் கால அவகாசம் தேவையென கோரப்பட்டுள்ளதாம். இதன்;படி தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு காசு வழங்கியமை, மற்றும் நேரடி அல்லது மறைமுக புலிகள் தொடர்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படக்கூடும் என்றும் தெரியவருகின்றது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 10 முதல் 14 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்க கனேடிய சட்டம் இடம் கொடுக்கின்றது.

இதேவேளை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயங்கிய பலரும் மற்றும் புலிகளின் பினாமி இயக்கத்தின் பெயரில் இயங்கிய முக்கிய புள்ளிகளும் கடமைகளில் இருந்து நழுவிவருகின்றனராம் எனவும் அறியப்படுகின்றது.

மேலும் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளாக பின்வரும் அமைப்புகளும் ஆர்.சி.எம்.பி. பொலிஸாரினால் இனம் காணப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், தமிழ் கலைக்கல்லூரி, உலகத்தமிழ் விளையாட்டு பிரிவு, வணிகம் கைநூல், உலகத்தமிழர் பத்திரிகை@.கடற்புலிகள் பிரச்சார பிரிவு, மற்றும் புலிகள் இயக்கம்… தீவிர விசாரணை தொடர்கின்றது.

இதேவேளை வன்னிப்புலி உறுப்பினர் கனடாவில் இருந்து நாடுகடத்தல்! வன்னிபுலிகளினால் பயிற்சியளிக்கப்பட்ட நிரஞ்சன் சேபியன் எனும் புலி உறுப்பினர் நேற்று முன்தினம் கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இவர் 1990களில் கனடாவில் கட்டவிள்த்து விடப்பட்ட வன்முறைகளில் ஈடுபட்டதுடன் வன்னிபுலிகளிற்காக பல வன்முறைகளை கனடாவில் மேற்கொண்டவர் என்றும,; கனடாவில் இயங்கிய வி.வி.ரி. குழு என்ற வல்வெட்டித்துறை குழுவின் முக்கிய நபராக செயற்பட்டவர்.

இவர்போன்று வன்னிபுலிகளிற்காக வன்முறையில் ஈடுபட்ட பலர் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். வன்னிபுலிகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் பிரதமர் ஸ்ரிபன் ஹாபர் தலைமையிலான அரசு மிகவும் இறுக்கமான நடவடிக்கையையே கடைப்பிடித்து வருவதாக எமது கனடா செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

நன்றி:- நெருப்பு இணையம்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 40 மணி நேரத்திற்கு மேல் தவிப்பு 60 அடி குழிக்குள் விழுந்த சிறுவனை மீட்க போராட்டம்
Next post 3 நாட்களாக மரண போராட்டம் 60 அடி ஆழ குழிக்குள் விழுந்த 6 வயது சிறுவன் உயிரோடு மீட்பு