அச்சுவேலியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை – புவி சரிதவியல் நிபுணர்கள்…!!

Read Time:1 Minute, 44 Second

Captureயாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி பகுதியில் ஏற்பட்டுள்ள நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என புவி சரிதவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்குடா நாட்டின் நிலத்தின் தன்மையை பொருத்தவரையில், இவ்வாறான சிறு சம்பவங்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் துறையின் பேராசிரியர் எஸ்.ரி.பீ. இராஜேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, நிலவரைக் கிணறை அண்மித்த நவகிரி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலத்துக்கடியில் காணப்படும் சுண்ணாம்புக் கற்பாறைகள் கறைவதால் இவ்வாறான நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் , இது நிலநடுக்கம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சிறு சம்பவங்கள் கடந்த காலங்களிலும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவகிரி பகுதியில் நேற்று (23) அதிகாலை ஏற்பட்டுள்ள நில தாழிறக்கம் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், மக்கள் அச்சமின்றி வாழ முடியும் எனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் துறையின் எஸ்.ரி.பீ. இராஜேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குண்டுகளால் துளைக்கப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் புகைப்படத்தை பொக்கிஷமாக பாதுகாத்த அமெரிக்க சீல் வீரர்…!!
Next post பசில் மீது விசாரணை ஆரம்பம்..!!