அச்சுவேலி பகுதியில் நில தாழிறக்கம் – ஆய்வு முடிவு…!!

Read Time:2 Minute, 31 Second

land-subsidenceயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நில தாழிறக்கமே ஏற்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் யாழ் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து குறித்த பகுதியில் நேற்றை தினம் கண்கானிப்பை மேற்கொண்டதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பர்ணாட் பிரேம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் 50 மீற்றர் அளவில் நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக சப்தத்துடன் குறித்த பகுதியில் நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த நில தாழிறக்கமானதும் ஏதேனும் அதிர்வினால் ஏற்பட்ட தாக்கத்தினால் உருவாகியுள்ளதா என்பது தொடர்பில் அநுராதபுரத்திலுள்ள நில அதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையத்தினூடாக ஆராயப்படுவதாகவும் பர்னாட் பிரேம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யாழ். மாவட்டத்தில் காணப்படும் சுண்ணாம்புக் கல் கட்டமைப்புக்கு அமைய இவ்வாறான தாழிறக்கங்கள் ஏற்படும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவி சரிதவியல் தொடர்பான பேராசிரியருமான செனவி எபிடவத்த தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி மற்றும் நவகிரி பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணியளவில் நிலத்தில் அதிர்வு உணரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை நில வெடிப்பு தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் நடுரோட்டில் உள்ளாடையை கழட்டி என்ன செய்றாங்க பாருங்க..!!
Next post ஜனாதிபதியின் கூற்றுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்…!!