வரி கட்டாமல் ரூ.1 கோடி வெளிநாட்டு பொருள்: அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்

Read Time:1 Minute, 51 Second

images.jpgநடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக்பச்சனும் வெளிநாட்டு பொருட்களை வாங்கி வந்ததில் சட்ட விதிகளை மீறியதாக சிக்கலில் மாட்டியுள்ளனர். அபிஷேக்- ஐஸ்வர்யா திருமணத்துக்கு முன்பு இருவரும் வெளிநாடு சென்றார்கள். லண்டனில் ரூ. 1 கோடிக்கு பொருட்கள் வாங்கினர். அவற்றை விமானம் மூலம் கொண்டு வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இருவரும் `கிரீன் சேனல்’ வழியாக வந்தனர். வெளிநாட்டு பொருட்களுக்கு சுங்க வரி செலுத்தவில்லை. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வெளிநாட்டு பொருட்களுக்கு ரூ. 36 லட்சம் வரை சுங்க வரி செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் கட்டவில்லை. இதுபற்றி சுங்கத்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று அமிதாப்பச்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்க அதிகாரிகள் இதை ஏற்கவில்லை. வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக உறுதி படுத்தியுள்ளனர். என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன. எவ்வளவு தொகை வரி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகள் ஊடுறுவல்: கடலோர தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு – டிஜிபி
Next post துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை