மலையகத்தில் மதுவை ஒழிக்க இ.தொ.கா.துரித நடவடிக்கை
மதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்து போகும் மலையக சமுதாயத்தை அதனிலிருந்து மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மலையகத்தில் மதுபாவனை விற்பனையைத் தடை செய்வது தெடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற தோட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இ.தொ.கா.தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது; பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இந்தியவம்சாவழி மக்களும் தமது உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் இ.தொ.கா.வின் பலத்தை அதிகரிக்க வேண்டும். கொழும்பில் தொழில்புரியும் மலையக இளைஞர், யுவதிகள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். இ.தொ.கா.வினால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையினால் தற்போது விடுதலை பெற்றுவருகின்றனர்.
அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாது. அத்தோடு எமது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை பார்த்துக் கொண்டிருக்கமுடியாததால் நாங்கள் எமது மலையக இளைஞர்கள் கைது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனிதவுரிமை மீறல் வழக்கையும் தாக்கல் செய்துள்ளோம்.
நாம் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் எமது மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்.
மேலும், மலையக பெருந்தோட்டப்பகுதியில் எமது சமுதாயம் மதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்துள்ளது.
இதனால் எதிர் காலத்தில் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் மதுவிற்பனை செய்வதற்கான தடையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியுள்ளார்.
மலையகத்தில் எத்தனை தொழிற்சங்கங்கள் உருவாகினாலும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் துன்ப துயரங்களில் இ.தொ.கா. மாத்திரமே முன்நின்று செயற்படுகின்றது.
எனவே, தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளவுயர்வு, வீடமைப்பு, மின்சாரம் பெற்றுக்கொடுத்தல், மலையக மக்களின் பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் தனித்துவமாக நின்று செயற்பட்டு வருகின்றது.
எமது மக்களின் பாதுகாப்பு நலன்கருதியே இ.தொ.கா. செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், உபதலைவர் வே.இராதகிருஷ்ணன் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...