சூரியக் குடும்பத்தில் புதிய கோள்…!!

Read Time:1 Minute, 48 Second

21PLANET-master1050-v2சூரிய குடும்பத்தில் புதிதாக 9 ஆவது கோளை வானியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் தற்போது 8 கோள்கள் உள்ளன. ஏனெனில் 9 ஆவது கோளாக கருதப்பட்ட புளுட்டோ சூரிய வட்டப்பாதைக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது என்றும், அது சுயஈர்ப்பு சக்தி கொண்டது என்றும் கண்டறியப் பட்டது. இதனால், இது கோள்களின் பட்டியலில் இருந்து 2006 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

இந்நிலையில், சூரிய குடும்பத்தில் பூமியை விட 10 மடங்கு எடை கொண்ட புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர்.

இது சூரிய குடும்பத்தின் 9 ஆவது கோள் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி மையத்தின் விஞ்ஞானிகளான கான்ஸ்டான்டின் பேட்டிஜின், மைக் பிரவுன் ஆகிய இருவரும்தான் இதை கண்டறிந்துள்ளனர்.

இது சூரியனை ஒருமுறை சுற்றி வர சுமார் 20,000 ஆண்டுகள் ஆகிறது. புதிய கோள், சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை விட, 50 மடங்கு தொலைவில் உள்ளது. புளூட்டோவை விட 5,000 மடங்கு எடை கொண்டது. இதை கண்களால் காண முடியவில்லை என்றாலும், அது இருப்பதற்கான அறிகுறி தெளிவாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியாவில் செஸ் விளையாட்டுக்கு தடை: மதகுரு அறிவிப்பு…!!
Next post கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்தது: 21 பேர் பலி…!!