இறந்துபோன பெண்ணின் சொத்து ஆள் மாறாட்டம் செய்து அபகரிப்பு பள்ளிக்கூட தாளாளர் கைது

Read Time:4 Minute, 2 Second

ஆள் மாறாட்டம் செய்து இறந்த பெண்ணின் சொத்தை அபகரித்ததாக பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம் (புலன் விசாரணை அதிகாரி) கூறியதாவது:- கணவன் இறந்த பிறகு திருவேற்காட்டைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் பூ வியாபாரி. பத்மநாபன் மனைவி ராஜம்மாள் (வயது 45). இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பத்மநாபன் இறந்த பிறகு அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜனிடம் ராஜம்மாளுக்கு தொடர்பு ஏற்பட்டது. நாகராஜனுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். திருவேற்காட்டில் அன்னை தெரசா ஆரம்பப்பள்ளியை நாகராஜன் நடத்தி வருகிறார். பள்ளியின் தாளாளர் அவர். அதோடு பைனான்ஸ் தொழிலையும் செய்து வருகிறார். நாகராஜனுடன் ராஜம்மாள் வந்து சேர்ந்த பின்னர் பல சொத்துகளை 2 பேரும் வாங்கினார்கள். அதில் திருவேற்காடு, கோலடி கிராமத்தில் 4,800 சதுரஅடி நிலமும் (கட்டிடத்துடன் கூடியது) ஒன்று. இந்த சொத்து ராஜம்மாள் பெயருக்கு வாங்கப்பட்டதாகும்.

தாய் கொலை வழக்கில் மகன்

பின்னர் ராஜம்மாளுக்கும், நாகராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜம்மாள் வேறு ஊருக்கு சென்று விட்டார். அங்கு வேறு பலருடன் ராஜம்மாள் பழக்கம் வைத்து இருந்தார். இது அவரது மகன் தினேசுக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் ராஜம்மாள் கொலை செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த கொலை வழக்கில் தினேஷ் குற்றம்சாட்டப்பட்டு உள்ளார்.

ஆள் மாறாட்ட மோசடி

இந்த நிலையில் சென்னை மேற்கு தாம்பரம் நிïமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த லோக சுப்பிரமணியன், நாகராஜனிடம் இருந்து 4,800 சதுரஅடி சொத்தை வாங்க விரும்பினார். அந்த சொத்து ராஜம்மாளிடம் இருந்து தானமாக கிடைத்ததாக 18.12.03 அன்று சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நாகராஜன் பத்திரப் பதிவு செய்திருந்தார். ஆனால் விசாரித்துப் பார்த்ததில், இந்த சொத்து நாகராஜனுக்கு ராஜம்மாளிடம் இருந்து தானமாகக் கிடைக்கவில்லை என்று தெரிந்தது. ஏனென்றால், 16.9.2003 அன்றே ராஜம்மாள் கொலை செய்யப்பட்டு விட்டார்.

எனவே, ராஜம்மாள் போல் வேறு ஒரு பெண்ணை காட்டி ஆள் மாறாட்டம் செய்து, அவரது சொத்தை போலியான ஆவணத்தைக் காட்டி நாகராஜன் அபகரித்து இருக்கிறார் என்பதும், அந்த சொத்தை விற்று மோசடி செய்ய நாகராஜன் முயன்று இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து லோக சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகராஜனை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை
Next post இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானம்