கடின வேலை- கரு தாமதம்…!!

Read Time:2 Minute, 12 Second

pregnant_wrok_001.w245வேலையையும் பெண்களையும் பிரிக்க முடியாது, அதுதான் இப்போது அவர்களுக்குப் பிரச்னையாகி இருக்கிறது!

ஆமாம். அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கும், அதிக எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் ஆய்வறிக்கை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியானது.குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இருந்த சராசரியாக 33 வயதுள்ள ஆயிரத்து 739 பெண்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களின் வேலை நேரம், உடல் உழைப்பு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

ஆமாம் அதன்படி, 30 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கிறார்கள். 40 சதவிகித பெண்கள் நாளொன்றில் 5 முறைக்கும் மேல் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் வேலைகளில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 16 சதவிகிதத்தினர் ஒரு வருடத்துக்குள் கருவுறுவதில்லை. 5 சதவிகிதத்தினருக்கு 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் கருவுறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

ஆமாம் அதாவது, ஒரு வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கும் 9 கிலோவுக்கு மேல் எடை தூக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். அது மட்டுமல்ல… அதிக எடையுடன் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இந்த இடைவெளி மேலும் நீள்கிறதாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா “தாரை தப்பட்டை”? -மாதவன் சஞ்சயன்…!!
Next post பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!