கழிவறைக்குள் மனைவி தொலைபேசி உரையாடல் : தலைமுடியை அறுத்த கணவன்…!!
கணவர் முன்னிலையில் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்பிற்கு மனைவி பதிலளிக்காமல் கழிவறைக்குச் சென்று தொலைபேசியில் உரையாடியதால் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது தலைமுடியை முழுமையாக அறுத்தெறிந்த சம்பவம் ஒன்று மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; குடும்பப் பெண் ஒருவர் தீக் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள தன் 4 வயது மகளை வைத்தியசாலையில் அனுமதித்து தன் தாயாரையும் மகளருகில் தங்க வைத்துவிட்டு வீட்டிற்கு ஓடோடி வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்தபோது இராணுவத்தில் சேவையாற்றும் தன் கணவர் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து கொண்டார்.
வீட்டில் கணவருடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.
அழைப்பினை பார்வையிட்ட மனைவி அவ்விடத்தில் பதில் பேசாமல் கழிவறைக்குச் சென்று கதவினை மூடிக் கொண்டு அதிக நேரம் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்துக் கொண்டிருந்த கணவர் மனைவி வெளியில் வந்ததுடன் அவர் மீது சந்தேகம்கொண்டு இவ்விடயம் தொடர்பாக வினவியதுடன் அந்நபர் யார் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அந்நபர் இங்கு கிராம பாதை நிர்மாண வேலைகளின்போது அறிமுகமானவர் என மனைவி தெரிவித்துள்ளார்.
எனினும் கணவர் அதனை நம்பாமல் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பியதால் இருவக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் கொண்டு மனைவியின் தலைமுடியைப் பிடித்து முழுமையாகக் கத்தரித்துள்ளார்.
இது தொடர்பாக மனைவி மத்துரட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கணவரை கைது செய்து வலப்பனை நீதிமன்றத்தில் நீதிவான் எச்.எம். செரீப்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் சந்தேக நபரை 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் 50,000 ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating