இலங்கையில் வருடமொன்றுக்கு 3,500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனை…!!

Read Time:1 Minute, 54 Second

5769c59a-0111-43fa-aa5d-b6e8e70ce856_S_secvpfஇலங்கையில் வருடமொன்றுக்கு 3ஆயிரத்து 500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன என்று போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் புபுது சுமனசேகர தெரிவித்தார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹரகமவிலுள்ள இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி சிகரெட் விலையை இரண்டு ரூபாவால் அதிகரித்தபோது, கம்பனிகள் வீழ்ச்சியடையும் என்றும், ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் கூறப்பட்டு அதற்கு எதிர்பு வெளியிடப்பட்டது.

ஆனால், ஜனவரி 3 ஆம் திகதி கம்பனிகள் தாமாக விலை அதிகரிப்பை மேற்கொண்டன. இலங்கையில் வருடமொன்றுக்கு 3 ஆயிரத்து 500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன. அப்படியானால், இரண்டு ரூபாய் விலை அதிகரிப்பு மூலம் கம்பனிகளுக்கு 7 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது.

இது அரசால் வருடமொன்றுக்கு மக்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவின் மொத்த செலவுக்கு நிகரான தொகையாகும் என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவறைக்குள் மனைவி தொலைபேசி உரையாடல் : தலைமுடியை அறுத்த கணவன்…!!
Next post வேப்பூரில் லாரி மீது வேன் மோதி 3 பேர் பலி…!!