உங்களது உடல் ஆரோக்கியம் பற்றி உங்கள் நாக்கு சொல்வதை பாருங்கள்….!!

Read Time:6 Minute, 30 Second

tongue_health_002.w540வாழ்க்கையைப் பற்றி சிலரின் நாக்கு, வாக்கு சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உங்களுடைய நாக்கின் நிலையை வைத்து உங்களது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலையைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அனைவரின் நாக்கும் ஒரே மாதிரி இருக்காது நிறம் மாறுபடுதல், நாக்கில் சிலருக்கு வெள்ளைப் படிவம் போன்று தோன்றுதல், சுருக்கங்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு வேற்றுமை இருக்கும்.

இது அவர்களது உடல்நலத்தை பற்றி நாக்கு வெளிபடுத்தும் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!! உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க “கை” என்ன சொல்கிறது என்று தெரியுமா? நாம் இதைப் பற்றி ஏதும் அவ்வளவுப் பெரிதாக அறிந்து வைத்திருப்பது இல்லை. நமது உடலில் ஏதாவதுக் கோளாறுகள் ஏற்படும் போது அந்த உறுப்பு மற்றும் இல்லாது வேறு சில உறுப்புகளிலும் சில மாற்றங்கள் தென்படும்.

அந்த அறிகுறிகளை வைத்து உங்கள் உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என எளிதாகக் கண்டுப்பிடித்துவிடலாம். அதுப்போல உங்கள் நாக்கில் ஏற்படும் மாற்றத்தினை வைத்து உங்கள் உடல்நலத்தைப் பற்றி எப்படி அறிந்துக் கொள்வது எனப் பார்க்கலாம்… உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா!!

சிவப்பான நாக்கு

ஊட்டச்சத்துக் குறைபாடு வெத்தலைப் போடாமலேயே சிலருக்கு நாக்கு மிக அதிகமாக சிவந்து காணப்படும். இது வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகும். இதனால் உங்களுக்கு காரமான அல்லது சூடான உணவுகள் சாப்பிடும் போது வலி ஏற்படும். பெரும்பாலும் சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு நாக்கு இப்படி மிக சிவப்பாக இருக்கும். மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கேற்ப உணவுகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

கரு நாக்கு

கரு நாக்கு (கருமை அல்லது ப்ரௌன் நிற படிவம் நாக்கில் படர்ந்திருக்கும்) உடையவர்கள் சரியாக அவர்களது வாய் மற்றும் பற்களை பராமரிப்பது இல்லை என்று அர்த்தமாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். நீங்கள் சாப்பிடும் உணவின் ருசி மாறுபட்டு உணர்வீர்கள். நல்ல டென்டல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். அதிகமாக புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு இவ்வாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வெள்ளை நாக்கு

ஈஸ்ட் தொற்று நாக்கில் வெள்ளை நிறத்தில் சீஸ் போன்று படிவம் படர்ந்திருந்தால் உங்களுக்கு வாயில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த வாய் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக் குறைகிறது என்பதற்கான அறிகுறி.

நீங்கள் ஆன்டி-பயாட்டிக் உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டியது அவசியம். நாக்கில் சுருக்கங்கள் – பூஞ்சைத் தொற்று வயது அதிகமானாலோ அல்லது பூஞ்சைத் தொற்று (Fungal) ஏற்பட்டாலோ இவ்வாறு உங்கள் நாக்கில் சுருக்கம் அல்லது வெட்டு ஏற்பட்டது போல இருக்கும். ஆன்டி-ஃபங்கள் (Anti-Fungal) மருந்துகள் எடுத்துக் கொள்வது தான் இந்த பிரச்சனைக்கானத் தீர்வு.

கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம்

சிலருக்கு கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம் ஏற்பட்டிருக்கும். இதை லியூக்கோப்லாக்கிய (leukoplakia) என்று கூறுகின்றனர். சரியான செல் வளர்ச்சி இல்லாத போது இது தோன்றுகிறது. அதிகமாய் புகைப்பவர்களுக்கு இந்த கீழ் நாக்கு வெள்ளைப் படிவம் ஏற்படுகிறது. இது காலப்போக்கில் புற்றுநோயாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிவப்பு சிதைக் காயம்

உங்கள் நாக்கில் சிவப்பாக சிதைக் காயம் ஒரு சில வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருப்பதுப் போல இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகச்சை மேற்கொள்ளுங்கள். இது நாக்குப் புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது. காரமான உணவுகள் சாப்பிட்டால் ஓரிரு வாரம் இதுப் போன்ற சிவந்த சிதைக்காயம் ஏற்படுவது சகஜம் தான்.,/p>

நாக்கு எரிச்சல்

உங்கள் நாக்கு எரிச்சலுக்கு நீங்கள் உபயோகப்படுத்தும் பற்பசைக் (Tooth Paste) கூடக் காரணமாக இருக்கலாம். மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் நெருங்கும் போது இதுப் போன்ற நாக்கு எரிச்சல் ஏற்படும்.

வலிமிகுந்த வாய்புண்

காரமான உணவுகள் மட்டுமின்றி நீங்கள் மிகவும் மன அழுத்தமாக இருந்தால் கூட இதுப் போன்ற வலி மிகுந்த வாய்புண் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவ பஸ் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு…!!
Next post திருட்டை தடுக்க உயிரைப் பணயம் வைத்த வாலிபன்…!!