ஆப்கானிஸ்தானில் செல்போன் நிறுவனங்களுக்கு புதிய வரிவிதிக்கும் தலிபான்கள்…!!

Read Time:2 Minute, 25 Second

6e790013-e698-4b17-93b7-3f2a4279d34d_S_secvpfஆப்கானிஸ்தானில் செல்போன் நிறுவனங்களுக்கு தலிபான்கள் புதிய வரிவிதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 12 ஆண்டுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் இருந்தன. தற்போது அவை வாபஸ் பெற்றதும் மீண்டும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இருந்தும் அவர்களுக்கு எதிராக அமெரிக்கா ராணுவம் உதவியுடன் ஆப்கானிஸ்தான் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தலிபான்களின் பொருளாதார நிலை மிகவும் சரிந்து வருகிறது. அதை சரிகட்ட அங்குள்ள செல்போன் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

பணம் தர மறுக்கும் நிறுவனங்களின் செல்போன் கோபுரங்களை தகர்த்தல், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களை கடத்துதல், தகவல் தொடர்பு கருவிகைள அழித்தால் போன்ற நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் செல்போன் நிறுவனங்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ என்ற புதிய வரியை விதித்துள்ளனர். இதன் மூலம் செல்போன் நிறுவனங்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவில் தலிபான் தீவிரவாதிகளின் கூட்டம் நடந்தது. அதில் ஆப்கானிஸ்தானில் செயல்படும் 4 பெரிய செல்போன் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் மாதம் செல்போன் நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கூடுதலாக 10 சதவீதம் வரிவிதித்தது. அதன் மூலம் ரூ. 8 கோடி கூடுதல் வருமானம் கிடைத்தது.

அது போன்று தங்கள் இயக்கத்துக்கும் பணம் திரட்ட தலிபான்கள் திட்டம் தீட்டி அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரிய இத்தாலிய பெண்…!!
Next post பெற்றோர்களை கொல்ல சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!