தோலில் ஏற்பட்ட சுருக்கத்தை நீக்குவதற்கு பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்த பிரேஸில் அழகுராணி 28 வயதில் மாரடைப்பால் மரணம்…!!

Read Time:5 Minute, 2 Second

fghhமுகத்தில் ஏற்­பட்ட தோல் சுருக்­கத்தை நீக்­கு­வ­தற்­காக பிளாஸ்திக் சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொண்ட பிரேஸில் அழ­கு­ராணி ஒருவர் மார­டைப்­பினால் உயி­ரி­ழந்­துள்ளார்.

ரெக்கல் சான்டோஸ் எனும் இந்த யுவதி 28 வயதில் திடீ­ரென கடந்த வாரம் உயி­ரி­ழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மொட­லாக பணி­யாற்­றிய ரெக்கல் சான்டோஸ், உள்ளூர் அழ­கு­ராணி போட்­டி­களில் வெற்­றி­யீட்­டி­யபின், பிரே­ஸி லின் மிகப் பெரிய அழ­கு­ராணி போட்­டி­களில் ஒன்­றான “முஸா டோ பிரேஸில்” போட்­டி­களின் இறுதிச் சுற்­றுக்குத் தெரி­வா­கி­யி­ருந்­தவர்.

தனது வாயைச் சுற்­றி­யுள்ள தோலில் ஏற்­பட்ட சுருக்­கங்­களை நீக்­கு­வ­தற்­கு­ சான்டோஸ் விரும்­பினார்.

இதற்­காக பிளாஸ்திக் சத்­தி­ர­சிகிச்சை செய்­து­கொள்­வ­தற்கு தீர்­மா­னித்தார்.

கடந்த 11 ஆம் திகதி இரவு இப்­பி­ளாஸ்திக் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதன்பின் சில மணித்­தி­யா­லங்­களில் மார­டைப்­புக்­குள்­ளான ரெக்கல் சான்டோஸ் உயி­ரி­ழந்­துள்ளார் என அவரின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

முன்­னிலை மொடல்­களில் ஒரு­வ­ரான ரெக்கல் சான்டோஸ் 28 வயதில் திடீரென உயி­ரி­ழந்­துள்­ளமை பல­ருக்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ரெக்கல் சான்­டோஸின் கண­வ­ரான ஜில்­பெர்டோ அஸெ­வெடோ இது தொடர்­பாக கூறு­கையில், ரியோ டி ஜெனைரோ நக­ருக்கு அரு­கி­லுள்ள நிட்­டேரி எனும் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் இந்த பிளாஸ்திக் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அதன்பின் சான்டோஸ் சுவா­சிப்­ப­தற்கு சிர­மப்­பட்­டதா­கவும் அவரின் இத­யத்­து­டிப்பில் திடீர் மாற்றம் ஏற்­பட்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

சான்­டோஸின் உடல்­நிலை மோச­ம­டைந்­ததைத் தொடர்ந்து அவர் நிட்­டேரி நக­ரி­லுள்ள மற்­றொரு வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

எனினும் அங்கு அவர் உயி­ரி­ழந்­து­விட்டார் என அவரின் கணவர் ஜில்பெர்டோ அஸெவெடோ தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி பிரேஸிலின் சாவோ பௌலோ நகரில் புதிய மொடலிங் பணியில் ஈடுபடவிருந்த நிலையிலேயே அவர் 11 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெக்கல் சான்­டோஸின் திடீர் மரணம் குறித்து “முஸோ டோ பிரேஸில்” அழ­கு­ராணி போட்டி ஏற்­பாட்­டா­ளர்­களும் கவலை தெரி­வித்­துள்­ளனர்.

“அவரின் கனவு இடையூறுக்­குள்­ளா­னமை குறித்து நாம் ஆழ்ந்த கவ­லை­ய­டை­கிறோம்.

எம்மைப் போன்று இப்­போட்­டியில் பங்­கு­பற்றும் அனைத்து யுவ­தி­களும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்” என “முஸோ டோ பிரேஸில்” அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

சான்­டோஸின் நண்பி ஒருவர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில், “ரெக்கல் சான்டோஸ் தனது தோற்றம் குறித்து தீவிர கரி­சனை கொண்­டி­ருந்தார்.

பிளாஸ்திக் சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளிலும் அவர் ஆர்வம் கொண்­டி­ருந்தார் “ என்றார்.

ரெக்கல் சான்­டோஸின் உடல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அடக்கம் செய்­யப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் மர­ணத்­துக்­கான கார­ணத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ரியோ டி ஜெனைரோ பொலிஸார் சட­லத்தை மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்த உத்­த­ர­விட்­டனர்.

கடந்த புதன்­கி­ழமை பிரேத பரி­சோ­தனை நட­வ­டிக்கை பூர்த்திய­டைந்­தன. எனினும் வார இறுதிவரை அவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருட்டை தடுக்க உயிரைப் பணயம் வைத்த வாலிபன்…!!
Next post கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நான்கு பேர் பலி…!!