அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பம்…!!

Read Time:1 Minute, 39 Second

discussionஅரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துகளை வினவும் அமர்வை இன்று முதல் 22 ஆம் திகதி வரை நடத்தவுள்ளதாக அரசியலமைப்பு திருத்தத்திற்கான மக்கள் கருத்துகளை கேட்டறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு 02 இல், ஸ்டேப்பள் வீதியின் விசும்பாயவில் அமைந்துள்ள செயலகத்தில் மக்களுக்கான அமர்வு நடத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அமர்வின்போது அரசியலமைப்பு திருத்தத்திற்கான தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்குமாறு மக்கள் கருத்துகளை கேட்டறியும் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதவிர 0112 43 76 76 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அல்லது 0112 32 87 80 என்ற பெக்ஸ் இலக்கத்தின் ஊடாக அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவுடன் தொடர்புகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தர்மபுரி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய என்ஜினீயரிங் மாணவர் காதல் விவகாரமா?: போலீஸ் விசாரணை…!!
Next post இலங்கை கடற்றொழில் சங்க நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்தொகை 689 மில்லியன்கள் வரை அதிகரிப்பு…!!