அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு தேசிய அறிவியல் பதக்கம்: 22-ந் தேதி ஒபாமா வழங்குகிறார்…!!

Read Time:1 Minute, 33 Second

0863e4b4-ed8b-49a3-9c76-25b29ff5b71d_S_secvpfஅமெரிக்க நாட்டில் அறிவியல், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு, அந்த நாட்டு அரசு தேசிய பதக்கம் வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு தேசிய பதக்க பட்டியலில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், ஒருவர், அமெரிக்காவில் வசித்து வரும், டாக்டர் ராகேஷ் கே ஜெயின். இவர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர். இவர் அறிவியல் துறையில் சாதனை படைத்ததற்காக அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

22-ந் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடக்கிற விழாவில் ராகேஷ் கே ஜெயின் உள்ளிட்டவர்களுக்கு பதக்கங்களை ஜனாதிபதி ஒபாமா வழங்கி கவுரவிக்கிறார். ராகேஷ் கே ஜெயின், கான்பூர் ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்.

தற்போது ஹார்வர்டு மருத்துவ கல்லூரியில், டியூமர் பயாலஜி (கட்டி உயிரியல்) துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இந்த துறையில் அவர் பல்வேறு விருதுகளை ஏற்கனவே பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவேரிப்பாக்கம் அருகே மனைவி–மகளை அடித்துக்கொன்ற விவசாயி…!!
Next post பர்கினா பாசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு…!!