மெட்டராஸிக்கு தடை விதித்தது சரியே- FIFA

Read Time:3 Minute, 10 Second

Fifa-2006.jpgபிரான்ஸ் அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேன் மோதல் விவகாரத்தில் இத்தாலி வீரர் மார்கோ மெட்டராஸிக்கு தடை விதித்தது, விதிமுறைகளின்படி சரியே என விளக்கம் அளித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா). உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மெட்டராஸியை மார்பில் முட்டித் தள்ளியதற்காக ஜிடேனுக்கு 3 ஆட்டங்களிலும், மெட்டராஸிக்கு 2 ஆட்டங்களிலும் விளையாடத் தடை விதித்தது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு.

தவிர, அவர்களுக்கு முறையே ரூ. 2.7 லட்சம், ரூ. 1.8 லட்சம் அபராதமும் விதித்தது. இந்நிலையில், மெட்டராஸிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இத்தாலியில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பத்திரிகைகளும் மெட்டராஸிக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளன.

மெட்டராஸிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை “”மானக்கேடான தீர்ப்பு” என அங்கிருந்து வெளிவரும் முன்னிலை விளையாட்டுப் பத்திரிகையான “லா ஸ்டாம்பா’ தலைப்பில் தெரிவித்துள்ளது. “”ஜிடேன்-மெட்டராஸி 3-2; கோபத்தில் இத்தாலி” என மற்றொரு முன்னிலை பத்திரிகையான “கெசட்டா டெல்லா’ தெரிவித்துள்ளது.

ஆனால், ஃபிபா மெட்டராஸிக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து விலகவில்லை. அதற்கு கால்பந்து விதிமுறைகளைக் காரணம் காட்டி விளக்கம் அளித்துள்ளது. கட்டுரை-54-ன் கீழ் மெட்டராஸிக்கும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என அது கூறியுள்ளது.

“அங்க அசைவுகளாலோ, வார்த்தைகளாலோ ஒருவர் மற்றொருவருக்கு ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டால் சர்வதேச போட்டிகளில் பணியாற்றத் தடை விதிக்க வழிவகை உள்ளது. அது, அதிகாரியாக இருந்தால் தண்டனை சற்று அதிகம். ஜிடேன் ஆத்திரப்படும்படி நடந்து கொண்டதற்காக வீரர் என்ற முறையில் மெட்டராஸிக்கு 2 ஆட்டங்களில் மட்டும் விளையாடத் தடை விதிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது ஃபிபா.

“தாயையும், சகோதரியையும் இழிவாக பேசியதாலேயே நான் அவ்வாறு நடந்துகொண்டேன்’ என டி.வி.க்கு முதன்முதலாக பேட்டி அளித்தபோது ஜிடேன் விளக்கம் அளித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 24 மணி நேரத்தில் லெபனானில் 150 இலக்குகளை தாக்கியது இஸ்ரேல்
Next post மீசாலையில் கிளெமோர் தாக்குதல்