நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Read Time:1 Minute, 42 Second

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு முகவரி இல்லாத கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் டிசம்பர் 5, 6 தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதப்பட்டு இருந்தது. முடிவில் இப்படிக்கு பாபர் மசூதி மீடபுக்குழு என மட்டும் இருநதுள்ளது. இந்த கடிதத்தை படித்து எச்சரிக்கையான போலீசார் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சீர்காழி இன்ஸ்பெக்டர் முருகவேல், மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றங்களில் உள்ள எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர். கடிதத்தில் குறிப்பிட்டபடி அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லாததால் போலீசார் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க நீதிமன்ற வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காதலித்து கம்பி நீட்டியவருக்கு ‘காப்பு’!
Next post மலேசியாவில் இறந்த பரமக்குடி இளைஞர் சாவில் புது திருப்பம்