நன்றியுணர்விற்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை முறைக்கு தைப்பொங்கல் அழைக்கிறது…!!

Read Time:2 Minute, 17 Second

124175503Ranilபுதிய பிரார்த்தனைகள், நோக்கங்களைக் கட்டியெழுப்பி வாழ்க்கை குறித்த புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தைக் காணக் கிடைக்கும் பெறுமதியான சந்தர்ப்பமாக புது வருடமொன்றின் ஆரம்பத்தினை நான் காண்கிறேன்.

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய ஒரு நாளாகும். அந்த மக்களின் அறுவடைத் திருநாளான இத்தினத்தில் சூரிய வணக்கத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் சூரியத் திருநாளாகவும் காணப்படுகிறது. இத்தினத்தில் சூரிய உதயத்துடன் தமிழ் மக்களுக்குப் புத்தாண்டு பிறக்கிறது.

சூரிய பகவானினால் வாழ்வாதாரம் வழங்கப்படுவதனை நினைவுபடுத்தி, தமது முதலாவது விளைச்சலை சூரிய பகவானுக்குப் படைப்பதும், விளைச்சலை சிறப்பானதாக மாற்ற உறுதுணையாய் அமைந்த மழை, விலங்கினங்கள் உள்ளடங்கலாக இயற்கையின் அருட்கொடைகளுக்கு நன்றி தெரிவிப்பதும் இத்தினத்தில் இடம்பெறுகிறது.

அனைத்து இலங்கை மக்களினதும் மத, கலாசார பல்வகைத்தன்மையை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி, கௌரவம் வழங்கி, ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்வதற்குத் தேவையான ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், தைப்பொங்கல் திருநாளானது சமத்துவத்துக்கு கௌரவமளிக்கும், நன்றியுணர்விற்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை முறையை நோக்கி நகர்வதற்கு நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேளச்சேரி அருகே கட்டிட மேஸ்திரியிடம் ரூ.5 லட்சம் கொள்ளை…!!
Next post தைப்பொங்கலை முன்னிட்டு அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விடுதலை…!!