ஆதார் அடையாள அட்டையால் இந்திய அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6,700 கோடி இழப்பு மிச்சமாகிறது: உலக வங்கி பாராட்டு…!!

Read Time:1 Minute, 39 Second

c9deca85-4012-4b05-8a4a-9588c49451fa_S_secvpfஇந்தியாவின் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள உலக வங்கி இந்த திட்டத்தின் வாயிலாக இந்திய அரசுக்கு 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,700 கோடி) அளவுக்கு இழப்புகள் மிச்சமாகும் என கணித்துள்ளது.

ஆதார் அடையாள அட்டைகள் வாயிலாக அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்றடைவதாகவும், தகவல் தொடர்பு சம்பந்தபட்ட குறைபாடுகள், பிரச்சனைகளை சமாளிக்க ஆதார் உதவியாக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் அட்டை வாயிலாக அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் போது தேவையற்ற முறையில் பணம் வீணாவது தடுக்கப்படுவதாகவும், முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறைந்து அரசுக்கு இழப்பை தடுப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

விரைவில் இந்தியாவின் 1.25 பில்லியன் பேருக்கும் ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை கிட்டதட்ட ஒரு பில்லியன் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனர் கவுசிக் பாசு தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பாண் விலை மீண்டும் குறைக்கப்படும்…!!
Next post ஹவாய் தீவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்: 12 பேர் கதி என்ன…?