உலக நாடுகளில் வாழும் அயல் நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்…!!

Read Time:1 Minute, 56 Second

7e0b4596-5774-4f2d-86a1-a49b6a8bdb24_S_secvpfஉலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி, உலக அளவில் 24 கோடியே 40 லட்சம் பேர் (2 கோடி அகதிகள் உள்பட) தங்கள் சொந்த நாட்டை விட்டு அயல்நாடுகளில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி 1.6 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990-ம் ஆண்டு கணக்கை விட 67 லட்சம் அதிகமாகும். இந்த பட்டியலில் மெக்சிகோ, ரஷியா, சீனா, வங்காளதேசம் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 20 நாடுகளில், 11 நாடுகள் ஆசியா கண்டத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர்களில் 3-ல் 2 பங்கு பேர், வெறும் 20 நாடுகளில் தான் வசிக்கின்றனர். இவ்வாறு அதிக வெளிநாட்டவர்களை தன்வசம் வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

இந்த 20 நாடுகளில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 52 லட்சம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990-ம் ஆண்டை (75 லட்சம்) விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரிழிவுக்கு நிவாரணம் தரும் கீரை…!!
Next post வங்க தேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!