துருக்கியில் காவல்நிலையம்-குடியிருப்பு மீது கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி-39 பேர் காயம்…!!

Read Time:2 Minute, 6 Second

06c3993f-5664-4082-a435-6e60610f93f1_S_secvpfதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த செவ்வாய் அன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தேடுதல் வேட்டையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தெற்கிழக்கு பகுதியில் உள்ள சினார் நகரில் குர்திஸ் தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவில் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். காவல் நிலையம் மீதும், அதன் அருகில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை புகைப்படத்துடன் துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் கார் குண்டை வெடிக்கச் செய்தபின்னர் ராக்கெட் மற்றும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதில் உயிர்ப்பலி குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

1984ம் ஆண்டு துருக்கி அரசுக்கு எதிராக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி கிளர்ச்சியை தொடங்கியதில் இருந்து நடைபெற்று வரும் வன்முறைக்கு இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் விபத்து: 6 இந்தியர்கள் பலி…!!
Next post தெற்கு சூடானில் உள்நாட்டு போர்: 14 லட்சம் மாணவர்கள் பள்ளியை விட்டு ஓட்டம்…!!