யாசகம் வழங்க மறுத்ததால் பிளாஸ்டிக் கடைக்கு தீ வைத்த நபர் அநுராதபுரத்தில் கைது…!!

Read Time:2 Minute, 37 Second

142192803625யாசகம் கொடுப்­ப­தற்கு வர்த்­த­கர் ஒருவர் மறுத்­த­தால் ஆத்திர­ முற்ற இளை­ஞ­ரான யாசகர், பிளாஸ்டிக் பொருட்­களை விற்­பனை செய்யும் கடை ஒன்றை தீயிட்­டமை தொடர்பில் அநு­ரா­த­புரம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

அநு­ரா­த­புர பிர­தே­சத்­தி­லுள்ள வர்­த­தக நிலையம் ஒன்றில் யாசகம் கேட்டு வந்த இந்த இளை­ஞ­ருக்கு கொடுக்க மறுத்த போது அந்த நபர் கடை­யி­லி­ருந்த இளை­ஞ­ருக்கு நிர்­வா­ணத்தைக் காண்­பித்­துள்ளார். இதை­ய­டுத்து கடை­யி­லி­ருந்த இளைஞர் அந்த நபரை தாக்கி விரட்­டி­ய­டித்­துள்ளார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் கடை­யி­லுள்ள ஊழி­யர்­க­ளுடன் சண்­டை­யிட்ட இளைஞர் பிளாஸ்டிக் கடைக்கு முன்னால் அமைக்­கப்­பட்­டுள்ள கூடா­ரத்தை தீ பர­வி­ய­போது அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

கூடாரம் எரி­வதைக் கண்ட அய­ல­வர்கள் தீயை அணைத்­துள்­ளனர்.

பிளாஸ்­டிக்­கடை உரி­மை­யாளர் இச்­சம்­பவம் தொடர்­பாக அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பொலிஸார் கடையில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்புக் கெம­ராவை பரி­சீ­லித்த போது யாச­கம்­கேட்டு வந்த இளைஞன் தீயிட்டு தப்பிச் செல்­வது பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது.

சந்­தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் சில நாட்கள் தேடுதல் நடத்­தியும் அந்த நபர் பிர­தே­சத்தை விட்டு தப்பிச் சென்­றுள்­ளது தெரி­ய­வந்­தது.

நேற்று முன்­தினம் காலை இந்த நபர் அநு­ரா­த­புரம் புதிய நகர பஸ் நிலை­யத்தில் யாசகம் பெற்றுக் கொண்­டி­ருந்த போது பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த நபர் கைது செய்யப்படும்போது இவரிடம் முதல்நாள் யாசகம் மூலம் வருமானமாகக் கிடைத்த 3000 ரூபா இருந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்கள்…!!
Next post உலக சாதனைக்காக 1008 முறை தலையால் சுவரில் முட்டிய விவசாயி…!!