அமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்தது அந்நாட்டு எம்.பி.க்களுக்கு சரியான பாடம்: ஈரான் ராணுவ தளபதி அதிரடி பேட்டி…!!

Read Time:3 Minute, 38 Second

4a8ea55c-fc6f-4382-93ad-e45b32074d1d_S_secvpfஅமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்ததன் மூலம் எங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று குரல்கொடுக்கும் அமெரிக்க எம்.பி.க்களுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளோம் என ஈரான் நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்தனர்.

குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகுகள் திடீரென பழுதாகி, திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதில் இருந்த பத்து அமெரிக்க கடற்படையினருடன் அந்த இரு படகுகளையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப், எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான், பிடிபட்ட படகுகளையும், பத்து வீரர்களையும் விடுதலை செய்வோம் என ஈரான் பிடிவாதமாக இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க கடற்படை படகை சிறைபிடித்ததன் மூலம் எங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று குரல்கொடுக்கும் அமெரிக்க எம்.பி.க்களுக்கு ஈரான் சரியான பாடம் கற்பித்துள்ளதாக ஈரான் நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கடற்படை படகு சிறைபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹஸன் பைரோஸாபாதி, இந்த சம்பவம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் கடைசி தவறாக இருந்துவிட முடியாது. (இனியும் இதைப்போன்ற அத்துமீறல்கள் நிகழலாம் என்னும் பொருள்பட அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்) எங்கள் நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கும் எம்.பி.க்களுக்கு தற்போது ஈரான் சரியான பாடம் கற்பித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் நகரை இழந்த பின் சொந்த வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!
Next post பத்து உயிர்களை பறித்த இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த 3 பேர் கைது..!!