உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி…!!

Read Time:2 Minute, 25 Second

14206Untitled-6பிரிட்டனிலுள்ள ஒட்டகச்சிவிங்கியொன்று உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒட்டகச் சிவிங்கியின் உயரம் 19 அடியாகும்.

பெம்புரோக் ஷயர் பிராந்தியத்திலுள்ள சோன்டர்ஸ்பூட் மிருகக் காட்சிச்சாலையில் வசிக்கும் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஸுளு என பெயரிடப்பட்டுள்ளது.

ஒட்டகச்சிவிங்கிகளின் பாதம் முதல் தலைவரையான சராசரி உயரம் 15 அடியாகும்.

ஆனால், ஸுளு அவற்றைவிட பல அடி உயரமானதாக காணப்படுகிறது.

தனது தலையை நிமிர்த்தி நிற்பது ஒட்டகத்தைப் பொறுத்த விடயமாகையால் அதன் உயரத்தை மிகத் துல்லியமாக அளவிட முடியவில்லை என மேற்படி மிருகக் காட்சிச்சாலையின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் அது வசிக்கும் பகுதியின் 20 அடி உயரமான வாயிலைவிட சற்று உயரம் குறைவாக இருப்பதால், இந்த ஒட்டகச் சிவிங்கியின் உயரம் 19 அடிகள் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

18 வயதான இந்த ஒட்டகச்சிவிங்கி 1.3 தொன் எடையைக் கொண்டுள்ளது. இது 5 வருடங்களுக்கு முன் நெதர்லாந்திலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததாகும். தினமும் சுமார் 20 கிலோகிராம் எடையுள்ள உணவை இந்த ஒட்டகச் சிவிங்கி உட்கொள்கிறதாம்.

பிரமாண்ட தோற்றத்தைக் கொண்டுள்ள போதிலும் ஸுளு மிக அமைதியான சுபாவம் கொண்டது என மேற்படி அதன் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஹுளுவை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தை தாம் வரவேற்பதாக கின்னஸ் உலக சாதனைகள் நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையை பாடாய் படுத்தும் இந்த குழந்தையை பாருங்கள்…!!
Next post திருமண வைபவத்தில் மணமகனின் வேட்டி திடீரென கழன்று வீழ்ந்தது…!!