ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.89 லட்சம் மோசடி: சென்னை பெண் கைது…!!

Read Time:2 Minute, 34 Second

c53ec7bb-f4d4-4640-970f-1455d3122410_S_secvpfசென்னை தண்டையார்பேட்டை சிவன் நகரை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது50). இவரது மனைவி காந்திமதி(43). இவர்கள் டெல்லியை சேர்ந்த வக்கீல் கவுரிசங்கர் பட்நாயக்(55) என்பவருடன் சேர்ந்து ஆல் இந்தியா ரெயில்வே சேப்டி கவுன்சில் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த 2014–ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பத்மநாபன் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரை சந்தித்தார். இதையடுத்து அவர்களிடையே நட்பு ஏற்பட்டது. பத்மநாபன் தனது தொண்டு நிறுவனம் மூலம் ரெயில்வேயில் வேலை பெற்று தருகிறோம். உங்களுக்கு தெரிந்த நபர்கள் இருந்தால் தெரிவியுங்கள் என்றார்.

இதனை நம்பிய ராஜா பலரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த 23 பேர் வேலை வாங்கி தருமாறு பத்மநாபனிடம் பணம் கொடுத்தனர். மொத்தம் ரூ.89 லட்சம் வரை வசூலானது. பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதற்கு தகுந்த பதிலை அளிக்காத பத்மநாபன் திடீரென தலைமறைவானார். மேலும் செல்போன் மூலமும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து ராஜா தேனி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்கு முன் பத்மநாபனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அவரது மனைவி காந்திமதி நேற்று கைது செய்யப்பட்டார். இவர்களின் கூட்டாளி வக்கீல் கவுரிசங்கர் பட்நாயக்கை பிடிக்க போலீசார் டெல்லியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் சென்னை சைதாப்பேட்டை, மயிலாப்பூர், விருதுநகர் பகுதிகளிலும் இதுபோன்று பணம் மோசடி செய்துள்ளனர். அப்பகுதி போலீசாரும் அவர்கள் மேல் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாகுமரி அருகே 5 மாத ஆண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை: தந்தை உள்பட 4 பேர் கைது…!!
Next post தர்மபுரி அருகே 113 வயது மூதாட்டி மரணம்…!!