வேப்ப மரத்தில் வடிந்த பால் – மக்கள் பரவசம், பூஜை

Read Time:1 Minute, 7 Second

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், மக்கள் பரவசம் அடைந்தனர், மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் செய்து, பாலையும் பிடித்துச் சென்றனர். ஒட்டசத்திரம் அருகேயுள்ள சிந்தலப்பட்டி ராமநாராயணன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் திடீரென பால் வடிய தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அந்த மரத்தை பார்க்க திரண்டு வந்தனர். மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் நடத்தினர். மரத்தில் வடியும் பாலை பீரோவில் வைத்து பூஜை செய்தால் பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகலாம் என்ற தகவலும் பரவியதால் பலர் போட்டி போட்டு பாலை பிடித்து செல்ல முண்டியத்தனர். இதில் ஒரு பெண் காயம் அடைந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வணிக வளாகத்தில் புகுந்து 8 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர்
Next post தட்டிப் போன வாய்ப்பு!-மீண்டும் பிடித்தார் நயன்தாரா