கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்…!!

Read Time:5 Minute, 9 Second

DFGGஅம்பலான்கொடை மாதம்பை பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கும் அம்பலான்கொடை. ஹிக்கடுவ மற்றும் மீட்டியாகொட ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவருகின்ற தொடர் கொலைகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அம்பலான்கொடை பொனதூவ மாதம்பை பகுதியிலுள்ள குறுக்கு வீதியொன்றிலிருந்து நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் சிலவும் காணப்பட்டன.

அசிட் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான தடயங்களும் சடலத்தில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் அம்பலான்கொடையைச் சேர்ந்த 24 வயதான சுசந்த மென்டிஸ் என்பவருடையது என நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுசந்த மென்டிஸ், கடந்த டிசம்பவர் மாதம் 8 ஆம் திகதி ஹிக்கடுவை பன்வில பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவர் என பொலிஸார் கூறுகின்றனர்.

கடந்த வருடம் மார்ச் 23 ஆம் திகதி இடம்பெற்ற ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் மென்டிஸின் கொலைக்கும், இந்த கொலை சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

மனோஜ் மென்டிஸின் கொலை தொடர்பில் பொடி லசீ என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க டி சில்வா என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே சிறிதுகாலம் நிலவும் பகையின் விளைவாக அவ்வப்போது இத்தகைய குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி பொடி லசீயின் தந்தை வசந்த ஷாந்த டி சில்வா தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்தபோது தெல்வத்த பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு வார காலத்தில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி ரத்கம பிரதேச சபையின் அப்பொதைய தலைவரான மனோஜ் மென்டிஸுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த தரிந்த சில்வா என்ற வர்த்தகர் அளுத்வல பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி பிரதேச சபை தலைவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த ஜனித் நிஷாந்த என்பவர்மீது பொடி லசீயின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை அண்மித்த பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜனித் நிஷாந்த காயமடைந்ததுடன் சம்பவம் தொடர்பில் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த பின்புலத்திலேயே மனோஜ் மென்டிஸ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 5 ஆம் திகதி அடையாளம் தெரியாத சிலர் மனோஜ் மென்டிஸ் கொலை வழக்கில் கைதான சந்தேகநபரான மீட்டியாகொட வேரகொட பகுதியைச் சேர்ந்த எரங்க லக்ஸான் என்பவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.

எனினும் துப்பாக்கிப் பிரயோகத்தினால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த சம்பவம் இடம்பெற்ற மறுநாள் தெல்வத்தை பகுதியைச் சேர்ந்த மனோஜ் மென்டிஸுடன் தொடர்புள்ளதாக கூறப்படும் இராணுவ சார்ஜன் தசந்த மென்டிஸ் என்பவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட போதிலும் அவர் அதில் உயிர்த்தப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி…!!
Next post மெக்ஸிகோவில் பஸ் விபத்து; 16 பேர் பலி…!!