ஹீகோ ஸ்வைர் எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு வருகிறார்…!!

Read Time:1 Minute, 45 Second

43545பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர், எதிர்வரும் புதன் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்ட இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுண்கள் நிதியை வழங்கி இருந்தது.

குறிப்பாக இலங்கையின் பாதுகாப்பு படையினரின் பயிற்சிகள் மற்றும் மறுசீரமைப்புக்காக இந்த நிதி வழங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான விசேட தூதுவர் ஒருவரையும் நியமித்திருந்தது.

இந்த நிலையில், ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில், பிரித்தானிய ராஜாங்க அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 இலட்சம் சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவனை சான்றிதழில் கொன்ற மனைவி…!!
Next post விபத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயம் : மூவரினது நிலைமையும் கவலைக்கிடம்…!!