குட்டி விமானம் மூலம் உலகை சுற்றி வந்த பெண் விமானி: 21 ஆயிரம் கி.மீ. பறந்து சாதனை…!!

Read Time:2 Minute, 3 Second

5d882112-2a82-45e9-b629-d549d247a15c_S_secvpfகுட்டி விமானம் மூலம் உலகை சுற்றி வந்த பெண் விமானி 21 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த பெண் விமானி டிரேசி சர்டிஸ்–டெய்லர் (53). இவர் கனடாவை பூர்வீகமாக கொண்டவர். அவர் குட்டி விமானம் மூலம் உலகை சுற்றி வந்து சாதனை படைக்க திட்டமிட்டார்.

கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் 11–ந்தேதி இங்கிலாந்தின் ஹம்பஸ்ஷர் நகரில் உள்ள பாரன்பரோலில் இருந்து 1942–ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட போயிங் ரக குட்டி விமானத்தில் தனியாக தனது பயணத்தை தொடர்ந்தார். இந்த விமானத்தின் என்ஜின் அறை திறந்த வெளியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவர் ஐரோப்பா, மேற்கு ஆசியா, மற்றும் ஆசியா உள்ளிட்ட கண்டங்களின் மீது பறந்தார். வியன்னா, இஸ்தான்புல், அம்மான், பாகிஸ்தான், இந்தியா, மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 23 நாடுகளில் தரை இறங்கினார்.

அங்கு விமானத்துக்கு பெட்ரோல் நிரப்பினார். மொத்தம் 23 நாடுகளின் மீது பறந்தார். மொத்தம் 3 மாதங்கள் வானில் பறந்து இருக்கிறார். இதன் மூலம் மொத்தம் 21 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் திமோர் கடலின் மீது பறந்த அவர் நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தரை இறங்கி தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.

தனி ஆளாக குட்டி விமானத்தில் பயணம் செய்து இவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி. ஆபாசபடம் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய, வவுனியா “மன்மத இளைஞன்” சனுஷன்..!! (அதிரடி”யின் படங்கள் & வீடியோ)
Next post அரசு ஆஸ்பத்திரியில் டாக்டருக்கு கொலை மிரட்டல்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது…!!