சிறுநீரக விற்பனை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு…!!

Read Time:2 Minute, 0 Second

yyகொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு சிறுநீரக விற்பனை இடம்பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சு இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக,அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி காந்தி ஆரியரட்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய ஊடகங்களில் தொடர்ந்தும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்தே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளை சுமார் 7 தனியார் வைத்தியசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், சிறுநீரகத்தை பெற்றுக் கொள்பவரும் அதனை அன்பளிப்பவரும் ஒரே நாட்டை சேர்ந்தவராக இருத்தல் அவசியமாகும்.இல்லையெனில் அது அதிகாரபூர்வ சிறுநீகர மாற்றுச் சிகிச்சையாக கருதப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுநீரக விற்பனைக்காக இலங்கைக்கு ஒருவரை அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் வைத்து முகாமைத்துவ மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி – பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்…!!
Next post போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது…!!