மெக்சிகோ சிறையில் இருந்து தப்பிய போதை பொருள் கடத்தல் தாதா மீண்டும் சிக்கினான்…!!

Read Time:2 Minute, 26 Second

d0d0c79b-bdbf-4556-aa6a-ee362de370c3_S_secvpfமெக்சிகோவை சேர்ந்தவன் ஜாகுயின் எல்சாபோ கஷ்மன் ரூ. 6500 கோடிக்கு சொந்தக்காரனான இவன் போதை பொருள் கடத்தல்காரன் ஆவான். உலகில் உள்ள மிக முக்கிய போதை பொருள் கடத்தல் ‘தாதா’க்களில் இவனும் ஒருவன்.

இவன் தனது சொந்த ஊரான சினாலோயா கார்டெலில் இருந்து அமெரிக்கா வழியாக கோகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தான்.

இவனை மெக்சிகோ மற்றும் அமெரிக்க போலீசார் கடந்த 13 ஆண்டுகளாக தேடி வந்தனர். கடந்த 2014–ம் ஆண்டில் அவனை கைது செய்து அல்டிபிலானே சிறையில் அடைத்தனர்.

அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தும் சிறையில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பினான். எனவே, அவனை மெக்சிகோ மற்றும் அமெரிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சினா லோவா மாகாணத்தில் லாஸ்மொசிஸ் நகரில் அவன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அங்கு ராணுவம், கடற்படை மற்றும் போலீசார் சென்று சுற்றி வளைத்து தாக்கினர்.

பல மணிநேரம் துப்பாக்கி சண்டைக்கு பிறகு எல்சாபோ கஷ்மன் பிடிபட்டான். அதை தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்த துப்பாக்கி சண்டையின் போது 5 பேர் பலியாகினர். சர்வதேச நாடுகள் தேடும் பட்டியலில் உள்ள எல்சாபோ கஷ்மன் தலைக்கு அமெரிக்கா ரூ. 33 கோடி பரிசுத்தொகை அறிவித்து இருந்தது.

இவன் குறித்து தகவல் தருபவருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே எல்சாபோ கஷ்மனை கைது செய்த ராணுவம் மற்றும் போலீசாரை அதிபர் என்ரிக் பெனா நியட்டோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 56) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
Next post பதன்கோட் தாக்குதல்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் அமெரிக்கா கண்டிப்பு…!!