இந்தியா-பாகிஸ்தான் இடையே இஸ்லாமாபாத்தில் ஜனவரி 15-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது: ஷெரீப் ஆலோசகர் தகவல்…!!

Read Time:4 Minute, 21 Second

404d45c9-c219-4755-b4fd-274cf8c891d0_S_secvpfபதான்கோட் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை வரும் 15-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் இஸ்லாமாபாத் சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளிடையே தடைபட்டிருந்த அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான், இருதரப்பு வெளியுறவு செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை ஜனவரி மாதத்தில் நடத்தலாம் என யோசனை தெரிவித்தது. இந்த யோசனையை இந்தியா ஏற்றுக்கொண்டது. எனவே, ஜனவரி 15-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என செய்தி வெளியானது.

இதற்கிடையே பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்று, பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனால், பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ஜனவரி 15-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி உறுப்பினர் ஷிரீன் மசாரி, இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்பினார். பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மட்டுமே தனது நாடு விவாதிக்கும் என்று இந்தியாவின் தூதர் ராகவன் கூறியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பேச்சுவார்த்தையின் நிலை என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என ஷிரீன் கேட்டுக்கொண்டார்.

இதற்கு வெளிவிவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பதிலளித்து பேசுகையில், “இருநாடுகளின் வெளியுறவு செயலர்களும் 15-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது புதிதாக ஒப்புக்கொள்ளப்பட்ட படி ஒருங்கிணைந்த இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பல்வேறு விஷயங்களில் காஷ்மீர் பிரச்சனையும் இருக்கும்” என்றார்.

பதான்கோட் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருப்பதால், இரு நாடுகளின் வெளியுறவுத் துறை செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடப்பது நிச்சயமற்றதாக இருந்தது. தற்போது பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டுள்ளதால், காஷ்மீர் விவகாரம், பதான்கோட் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க வழி ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹரிபொட்டர் கற்பனைப் பாத்திரம் உயிர்வாழ்கிறதா: குழப்பத்தை ஏற்படுத்திய போக்குவரத்து கெமரா…!! (வீடியோ)
Next post சென்னையில் மாயமான இளம்பெண் கோவையில் மீட்பு…!!