பாரிஸில் போலி வெடிகுண்டு அங்கி அணிந்து பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தவர் சுட்டுக் கொலை…!!

Read Time:1 Minute, 51 Second

dsdsபிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பொலிஸ் நிலையத்தினுள் போலி வெடிகுண்டு அங்கி அணிந்து கத்தியோடு நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சார்லி ஹெப்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினத்தில் நடந்த இந்த சம்பவம் பாரிஸில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பாரிஸில் கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அதன்போது, பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே பொதுமக்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே அருகே இருந்த பொலிஸ் நிலையத்தினுள் இளைஞர் ஒருவர் கத்தியோடு நுழைய முயன்றார்.

அவர் மனிதவெடிகுண்டு போல் போலி குண்டுகள் கொண்ட அங்கியை மேல் உடையாக அணிந்திருந்ததைக் கண்ட பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரைக் கொன்றனர். இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது தீவிரவாத தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருக்கும் பாரிஸ் நகரில் இந்தச் சம்பவம் மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடன விருந்துக்கு சென்ற தாய்: குழந்தையை கடித்து உண்ட எலிகள்…!!
Next post பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது…!!