லிபியாவில் பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்; 47 பேர் உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 55 Second

saddமேற்கு லிபியாவிலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட டிரக் வண்டிக் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தது 47 பேர் பலியாகியுள்ளனர்.

ஸலிடன் நகரிலுள்ள அல் ஜஹ்பல் பயிற்சி முகாமை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி பயிற்சி முகாமானது கேணல் கடாபியின் ஆட்சிக் காலத்தில் இராணுவத் தளமொன்றாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதேசமயம் அன்றைய தினம் வட லிபியாவிலுள்ள பிரதான துறைமுக நகரான ரஷ் லனுப்பின் நுழைவாயிலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்படி பலியானவர்களில் 16 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குகிறது.

ரஷ் லனுப் நகரின் நுழைவாயிலிலுள்ள சோதனைச்சாவடியின் நுழைவாயிலிலுள்ள சோதனைச்சாவடியருகே வாகனமொன்றைச் செலுத்தி வந்த சாரதியொருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் 3 காவலர்களும் உயிரிழந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் கேயல் கடாபி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது முதற்கொண்டு லிபியா ஸ்திரத்தன்மையின்மையை எதிர்கொண்டுள்ளது.

அந்நாடு சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் உட்பட இரு அரசாங்கங்களால் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிதாக 5 பெரு நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு…!!
Next post நடன விருந்துக்கு சென்ற தாய்: குழந்தையை கடித்து உண்ட எலிகள்…!!