பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

Read Time:2 Minute, 43 Second

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடும் ரோடு ஷோ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பாண்டிச்சேரி பிரான்ஸ் நாட்டு தூதரகம் மற்றும் பிரான்ஸ் நாடு இணைந்து வர்த்தக கண்காட்சி நடத்தும் “புரோமோசலூன்ஸ்’ நிறுவனம் கூட்டாக இந்த நிகழ்ச்சியை நடத்தின. வாகன வசதி பாகங்கள், கட்டுமான சாதனங்கள், பதப்படுத்தப்பட்ட விரிவு, சுற்றுச்சூழல், ஹோம் ஸ்டைல், அலங்காரம், பர்னீஷிங், ஆப்டிகல்ஸ், கண்ணாடிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் போன்றவை தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்தது. புரோமோசலூன்ஸ் பொது மேலாளர் ராஜ் ஆனந்த் பேசுகையில், இந்திய வர்த்தக நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்படத் துவங்குகின் றன. இந்த நிறுவனங்களுக்கு பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச கண்காட்சி மூலம் பல்வேறு விரிவாக்க முதலீடு வாய்ப்புகள் கிடைக்கும். பாரீசில் நடைபெறும் இந்த சர்வதேச கண்காட்சியில் 400 டிரேட் ஷோக்கள் நடைபெறும். இதில் பங்கேற்க 90 லட்சம் பார்வையாளர்கள் வருகை தர உள்ளனர். 1 லட்சம் நிறுவனங்கள் ஸ்டால்கள் நிறுவி உள்ளன. பிரெஞ்ச் நாட்டு கண்காட்சியை நடத்தும் நிறுவனம் சென்னை மட்டுமின்றி, கொல்கத்தா, டெல்லி, மும்பை நகரங்களில் 4, 5 மற்றும் 6 தேதிகளில் ரோடு ஷோ நடத்தி பங்கேற்க அழைப்பு விடுக்கின்றனர் என்று கூறினார். புரோமோசலூன்ஸ் நிறுவனத்தின் தலைமயகம் பாரிசில் உள்ளது. இந்நிறுவனம் லாபநோக்கு இல்லாத நிறுவனமாக பிரெஞ்ச் டிரேட் ஷோக்களில், கண்காட்சிகளில் சர்வதேச மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்க வரவேற்கிறது. இதில் 124 நாடுகளில் 58 இடங்களில் இதன் நெட்வொர்க் நிறுவனங்கள் உள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் பலி
Next post டாக்டருக்கு பளார் – விஜயசாந்தி அதிரடி