உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலி வீரருடன் மோதல்…

Read Time:2 Minute, 52 Second

Foot-france.1.jpgஇத்தாலி வீரர் மார்கோ மெட்டராஸியை மார்பில் முட்டித் தள்ளியதற்காக பிரான்ஸ் அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேனுக்கு 3 ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு. அத்துடன் அவருக்கு ரூ. 2.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிடேன் அறிவித்துவிட்டதால், சம்மேளனத்தின் மனிதாபிமான மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் சேர்ந்து 3 நாள்கள் பணியாற்றுமாறு ஜிடேனிடம் உறுதி வாங்கியுள்ளது ஒழுங்கு நடவடிக்கை குழு.

மெட்டராஸிக்கு தடை: ஜிடேன் ஆத்திரப்படும் வகையில் நடந்து கொண்டதற்காக, இத்தாலி வீரர் மெட்டராஸிக்கு 2 ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்துள்ளது ஒழுங்கு நடவடிக்கை குழு. ரூ. 1.8 லட்சம் அபராதம் செலுத்தவும் மெட்டராஸிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் வியாழக்கிழமை தனது விளக்கத்தை ஜிடேன் அளித்தார். அடுத்த சிறிதுநேரத்தில் கால்பந்து சம்மேளனம் தனது இணையதளத்தில் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் 90 நிமிஷம் விளக்கம் அளித்தார் 34 வயதாகும் ஜிடேன். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 5நபர்குழு அவரிடம் விசாரணை நடத்தியது.

பெர்லினில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் மெட்டராஸியை தலையால் முட்டி களத்தில் வீழ்த்தினார் ஜிடேன். இதையடுத்து, உடனடியாக சிவப்புஅட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இருந்தாலும் அவரே போட்டியின் சிறந்தவீரர் விருதைப் பெற்றார். அதுவும் பறிக்கப்படலாம் என்ற பேச்சு வலுத்திருந்தது. ஆனால் அவர் இனிமேல் விளையாடப் போவதில்லை என்பதால், கருணைகாட்டி அபராதத்துடன் தண்டனையை முடித்துக் கொண்டது கால்பந்து சம்மேளனம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விஜயகாந்த்துக்கு ரஜினி வாழ்த்து!
Next post சுவீடன் தூதர் கோரிக்கை விடுதலைப்புலிகள் ஏற்க மறுப்பு