30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்கள்: போர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியல்..!!

Read Time:3 Minute, 32 Second

374014-agarwal1சர்வதேச அளவில், 30 வயதுக்குள் சாதனை படைத்த இளம் தொழில் அதிபர்கள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினருமாக 45 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த வணிக பத்திரிகையான போர்ப்ஸ் நுகர்வோர், கல்வி, ஊடகம், உற்பத்தி, தொழில், சட்டம் மற்றும் கொள்கை, சமூக நிறுவனர்கள், அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் தொழில் அதிபர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது ஐந்தாவது ஆண்டாக அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வணிக துறையில் சாதனை படைத்த சுமார் 600 ஆண்கள் மற்றும் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 45 இளம் தொழில் அதிபர்கள் உள்ளனர்.

நுகர்வோர் துறையில், ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான ரித்தேஷ் அகர்வால் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 22. இவர் இந்தியாவில் 100 நகரங்களில் 2,200 சிறிய ஓட்டல்களை நிர்வகித்து வருவதற்காக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ககன் பியானி (28 வயது), நீரஜ் பெர்ரி (28 வயது), கரிஷ்மா ஷா (25 வயது) ஆகியோரும் இந்த துறையில் சாதனை படைத்து இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

பொழுதுபோக்கு துறையில் (ஹாலிவுட் உள்பட) லில்லி சிங் (27 வயது), வங்கித் துறையில் நீலாதாஸ் (27 வயது), முதலீட்டு ஆலோசனை துறையில் திவ்யா நெட்டிமி (29 வயது), விகாஸ் பட்டேல் (29 வயது), நீல் ராய் (29 வயது) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். துணிகர முதலீட்டுப் பிரிவில், இந்திய வம்சாவளியினரான விஷால் லுகானி (26 வயது), அமித் முகர்ஜி (27 வயது) ஆகியோர் உள்ளனர்.

ஊடக துறையில் இருந்து 27 வயதான நிஷா சிட்டால், ஆஷிஷ் பட்டேல் (29 வயது) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். உற்பத்தி துறையில் இருந்து சம்பிரிதி பட்டாச்சார்யா (28 வயது), சாகர் கோவில் (29 வயது) உள்ளனர். சமூக நிறுவனர்கள் துறையில் அனூப் ஜெயின் (28 வயது) சட்டம் மற்றும் கொள்கை துறையில் ஆஷிஷ் கும்பத் (26 வயது), திபயன் கோஷ் (27 வயது), அனிஷா சிங் (28 வயது) உள்ளனர். அறிவியல் துறையில் இருந்து சஞ்சம் கார்க் (29 வயது) இடம் பெற்றுள்ளார். மொத்தத்தில் 45 இளம் இந்திய தொழிலதிபர்கள் போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியாவில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 336 பேர் பலி…!!
Next post மில்லியன் கணக்கானோரை கவர்ந்த ஒரு கால் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்..!!