8.2 ரிக்டர் அளவிற்கு இமயமலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை..!!

Read Time:1 Minute, 56 Second

download (1)இமயமலையில் 8.2 ரிக்டர் அள்விற்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டில் சிக்கிமில் ஏற்பட்ட 6.9 அளவிலான நிலநடுக்கம், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட 7.3 அளவிலான நிலநடுக்கம், சமீபத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட 6.7 அளவிலான நிலநடுக்கம் ஆகியவற்றால் இமயமலை சிதைந்து வருவதாக நிலநடுக்க கணக்கீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில் இதை விட பயங்கர நிலநடுக்கம் இமயமலையில் ஏற்பட உள்ளது. இந்த நிலநடுக்கம் 8.2 அல்லது அதற்கு மேல் இருக்கக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புவி அமைப்பின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இதுபோன்ற இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமென்றும் இதனால் நேபாளம், பூடான், மியான்மர், இந்தியா ஆகிய நாடுகள் மிகப் பெரிய அழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கையை சர்வதேச புவியியல் ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகத்தில் கடித்ததாக முறைப்பாடு: ஹபராதுவை பிரதேச சபை முன்னாள் உப தலைவருக்கு விளக்கமறியல்..!!
Next post வாகனத்தில் ஏறி 104 கிலோமீற்றர் பயணம் செய்த காட்டுக் கரடி…!!