மலேசியாவில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 336 பேர் பலி…!!

Read Time:1 Minute, 41 Second

70c0a27f-7119-487c-ba92-b11bd7cf3dcd_S_secvpfமலேசியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2015-ம் ஆண்டில் 336 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சராசரியாக ஒருமாதத்திற்கு 28 பேர் இறந்துள்ளனர். இது கடந்த 2014-ம் ஆண்டினை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

இதேபோல் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2014-ல் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 698-ஆக இருந்தது 2015-ல் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 836-ஆக உயர்ந்துள்ளது. இது 11.2 சதவீதம் ஆகும்.

உலக அளவிலும் டெங்கு மற்றும் மலேரியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் டெங்கு நோய் பாதிப்பில் சிக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் குழந்தைகள் டெங்கு நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொளத்தூர் அருகே குறி சொல்லும் சாமியாரை அடித்து உதைத்த 11 பேர் கைது…!!
Next post 30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்கள்: போர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியல்..!!